மோடியை வெட்டி கூறுபோடுவோம் பேச்சு- காங். வேட்பாளர் இம்ரான் மசூத் கைது

உத்தரபிரதேசமாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத். இவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ரஷீத் மசூதின் உறவினர். கடந்த வியாழன்று சகாரன்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய இம்ரான் மசூத், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது உத்தரபிரதேசத்தை குஜராத் போல கருதுகிறார். குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரபிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால் அவரை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு விடுவோம் என்று பேசினார்.
இந்த திடுக்கிடும் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சி.டி. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தியா திவாரிக்கு கிடைத்தது. அவர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, உள்ளூர் போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரசார சூட்டில் அப்படி பேசிவிட்டேன். நான் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை உத்தரபிரதேச போலீசார் இம்ரான் மசூத்தை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சகாரன்பூரில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications