மக்கள் சலிப்பு, வெறுப்பில் உள்ளனர்.. ம்ஹூம்... மறுபடி, பாஜக ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: ‛‛2024 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. இதன்மூலம் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை'' என ஆணித்தனமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.
தற்போது 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் மம்தா பானர்ஜி கவனம் செலுத்தி வருகிறது. தேசிய அளவில் 3வது அணியை அமைக்க அவர் முயன்று வருகிறார்.

3வது அணிக்கு முயற்சி
அதாவது மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், அவர் பிரதமர் பதவி மீது மம்தா பானர்ஜி கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மம்தா தனது மாநிலத்தில் தேர்தல் பணியை துவக்கி உள்ளார். இதற்காக தனியாக இணையதளம் பக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி பேச்சு
மேலும் மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று புருலியா மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுபற்றி அவர் கூறியதாவது:

பணமதிப்பிழப்பில் ஊழல்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தவறான பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக முற்றிலுமாக சீரழித்துவிட்டது.

2024ல் பாஜகவுக்கு வெற்றியில்லை
பாஜக எதிர்க்கட்சிகளை அடக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்துகிறது. மொத்தத்தில் பாஜக அரசு கலப்படம் நிறைந்த அரசாக உள்ளதால் பாஜக மீது மக்கள் சலிப்பு, வெறுப்பு அடைந்துள்ளனர். இதனால் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறாது. இதன்மூலம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications