அட்சய திருதியையில் அசத்தும் ஒடிசா அரசு.. தொடங்கியது பூரி ஜெகன்நாதர் கோவில் தேர் கட்டும் பணி!
புவனேஸ்வர்: அட்சய திருதியை நாள் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு முறைகளில் பின்பற்றி வருகின்றனர். ஒடிசாவில் பாரம்பரியமாக பூரி ஜெகன்நாதர் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் அதற்கான 3 தேர்கள் வடிவமைப்பு பணி இந்த நாளில் தான் சிறப்பாக துவங்கப்படுகிறது.
இந்தியாவில் அட்சய திருதியை வெவ்வேறு பெயர்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு மாநிலம் இந்த கொண்டாட்டம் வேறுபட்டு வருகிறது.
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமின் பிறந்த நாளாக இந்து மதத்தில் அக் ஷய திரிதியை கொண்டாடப்பட்டு வருகிறது. வைணவ கோவில்களில் இது பின்பற்றப்பட்டு வருகிறது.

விஷ்ணுவின் வாசுதேவ அவதாரம்
நாட்டின் சில இடங்களில் பரசுராம ஜெயந்தி என்ற பெயரில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் விஷ்ணுவின் வாசுதேவ அவதாரமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர்.புராணத்தின் அடிப்படையில் அட்சய திருதியையில் வேத வியாசர் விநாயகருக்கு இந்து இதிகாசமான மகாபாரதத்தை ஓதத் தொடங்கியதாகவும், இன்னொரு புராணத்தில் இந்த நாளில் கங்கை நதி பூமிக்கு வந்ததாக கூறுகின்றனர்.

தானம், தர்மம்
இந்தியாவின் சில இடங்களில் இறந்துபோன அன்புக்குரியவர்களை நினைவு கூறும் நாளாகவும் இது உள்ளது. மேலும் பல பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, தானம் தர்மங்கள் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாளில் விரதம் இருந்து தொண்டு செய்தல், பிறருக்கு உதவி செய்வது கூடுதல் பலன் அளிக்கும் என்பதால் ஏராளமானவர்கள் இதை பின்பற்றி வருகின்றனர்.

மிகப்பெரிய விழா
ஒடிசாவிலும் அட்சய திருதியைக்கு தனிச்சிறப்பு உள்ளது. இந்ந மாநிலத்தை பொறுத்தமட்டில் பூரி ரதம் யாத்திரை விழாக்களுக்காக இந்துக்கள் ஆண்டுதோறும் தேர் கட்டும் பணியை அட்சய திருதியை நாளில் தான் துவங்குவர். 'காந்தலேபனா யாத்ரா' எனும் சந்தன் யாத்திரை பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில்கொண்டாடப்படும் மிக நீண்ட திருவிழாவாகும். இது 42 நாட்கள் நடக்கும்.

2 பகுதிகளாக விழா
விழாவானது 2 'பஹாரா சந்தனா' மற்றும் 'பிதார சந்தனா' என இரண்டு பகுதிகளாக அனுசரிக்கப்படுகிறது. பஹாரா சந்தனம் என்பது அக்சய திருதியை நாளில் இருந்து 21 நாட்கள் நடக்கும். ஜெகநாதர் கோவிலின் முக்கிய தெய்வங்களின் சிலைகள் மற்றும் 'பஞ்ச பாண்டவர்' என்று அழைக்கப்படும் ஐந்து 'சிவலிங்கங்கள்' கோவிலி் உள்ள 'சிங்கத்வாரா' (சிங்க வாயில்) முதல் நரேந்திர தீர்த்தத்திற்கு சாஸ்திரி, சம்பிரதாய சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்படும். பல்வேறு சடங்குகளுக்கு பிறகு சிலைகள் ஜெகன்நாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நரேந்திர குளத்தில் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் வைக்கப்பட்டு தொப்போற்சவம் நடத்தப்படும். அதன்பிறகு புதிதாக வடிவமைத்த தேர் பவனி நடைபெறும்.

தேர் வடிவமைப்பு பணி
கோவிலில் ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் பயன்படுத்தப்படும். இந்த தேர்கள் வடிவமைப்பு பணியில் 100 தச்சர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நிலையில் தான் அட்சய திருதியை நாளான இன்று ரத் காலாவில் (தேர் செய்யும் முற்றத்தில்) சிறப்பு சடங்கு செய்து, அங்கிய மாலையை (தெய்வத்தின் கட்டளையை குறிக்கும் மாலை) மூன்று மரத்துண்டுகளில் தலைமை தச்சர் வைப்பார். அதன்பிறகு தங்க கோடாரியை தச்சர்கள் தொட்டு மூன்று தேர்களுக்கான மரக்கட்டைகளை தேர்வு செய்து தேர் வடிவமைப்பு பணி துவங்கும். இது காலம்காலமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications