கொல்கத்தா நீதிமன்றத்தில் ப சிதம்பரம் முற்றுகை! மம்தா அரசுக்கு ஆதரவாக ஆஜரானதால் ஆக்ரோஷம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் சார்பில் ப சிதம்பரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய ப சிதம்பரத்தை சூழ்ந்து கருப்பு ரிப்பன் காட்டி ‛மம்தா பானர்ஜியின் தரகர்' என கடும் வார்த்தைகளால் கோபத்தை வெளிக்காட்டினர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகளை மேற்கு வங்க அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான ஆதிர் சவுத்ரி ரஞ்சன் கொல்கத்தாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ப சிதம்பரம் ஆஜர்
இந்த வழக்கு மூலம் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் தான் மேற்கு வங்க அரசிடம் இருந்து பங்குகள் வாங்கிய தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் களமிறங்கி உள்ளார். வழக்கு தொடர்பாக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சூழ்ந்து எதிர்ப்பு
இதற்கு அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கில் ஆஜராக கூடாது என அவரை மறித்தனர். மேலும் அவரை சூழ்ந்து கருப்பு ரிப்பன் காட்டினர். அதோடு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்த அரசுக்கு பக்கப்பலமாக உள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக எப்படி ஆஜராக முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மம்தாவின் தரகர்
இதுதவிர ப சிதம்பரம் ‛மம்தா பானர்ஜியின் தரகர்' என விமர்சனம் செய்தவர், அவரால் தான் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தின்போது ப சிதம்பரம் அணிந்திருந்த வழக்கறிஞர்களுக்கான கருப்பு அங்கி பிடித்து இழுக்கப்பட்டது. இதையடுத்து அவர் காரில் ஏறி சென்றார். இந்த வழக்கில் ப சிதம்பரம் முதல் முறையாக நேரில் ஆஜரான நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி செயல்பாட்டை பாதிக்கும்
போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞரான கவுஸ்தவ் பாக்சி கூறுகையில், ‛‛மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக ப சிதம்பரம் ஆஜராகிறார். இவர் சாதாரண நபர் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்துள்ளார். தற்போதும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் உள்ளார். இவரது செயல்பாடு கட்சியை செயல்பாட்டை பாதிக்கும். மேலும் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இருப்பதை காட்டும். இதனால் தான் எதிர்த்தோம்'' என்றார்.

உத்தரவிட முடியாது
இதுபற்றி மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‛‛ கொல்கத்தா நீதிமன்றத்தில் ப சிதம்பரத்துக்கு எதிரான போராட்டம் பற்றி கேள்வி பட்டேன். தொழில் போட்டி நிறைந்த உலகம் இது. இதனால் ஒவ்வொருவருக்கும் தங்களது தொழில் சார்ந்த முடிவுகளை விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ள உரிமை உண்டு. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என நான் எதுவும் அவருக்கு உத்தரவிட முடியாது'' என்றார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications