டெல்லியில் கொட்டும் மழைக்கு இடையில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம் !
டெல்லி: டெல்லியில் கொட்டும் மழைக்கு இடையில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்தது. அந்த மழையிலும் கலைந்து செல்லாமல் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 23வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது இன்று காலையில் எட்டு மணியளவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கை, கால்களைக் கட்டிக்கொண்டு சாலையில் உருளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து டெல்லியில் கனமழை பெய்தது. வெயில்வாட்டி வந்த நிலையில் மழையால் வெப்பம் தனிந்து குளிர்காற்று வீசியது. இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications