இந்தியாவில் கால்பதிக்கும் “பர்கர் கிங்”- ஹூப்பர் பர்கருக்கு முன்பதிவு மட்டும் 1200!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகெங்கும் பிரபலமான பர்கர் கிங் துரித உணவு நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் கால் பதிக்கிறது.

அதற்காக நம்மவர்கள் இப்போதே வரிசை கட்டி, வாயை "ஆஆஆஆ" வென்று திறந்து எதிர்பார்ப்புடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மாலில் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி துவங்கப்படவுள்ள இந்த நிறுவனத்தின் சேவையை எதிர்பார்த்து பலர் காத்திருகின்றனர்.

இ-பே மூலமாக முன்பதிவு:

இ-பே மூலமாக முன்பதிவு:

இதனை உறுதி செய்யும் வகையில் பர்கர் கிங்கின் உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய அந்நிறுவனம் இ-பே வர்த்தக இணையத்தளம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

சலுகை விலையில் விற்பனை:

சலுகை விலையில் விற்பனை:

வாடிக்கையாளர்களுக்கு இந்த புதுமையான சேவையை அறிமுகப்படுத்த இ-பே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பர்கர் கிங் நிறுவனம், அதன் பிரபலமான ஹூப்பர் வகை பர்கர்களை ரூபாய் 128க்கு சலுகை விலையில் அளிப்பதாக தெரிவித்திருந்தது.

கொரியர் மூலம் கூப்பன்:

கொரியர் மூலம் கூப்பன்:

பர்கர் கிங்கின் உணவு வகைகளை முன் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொரியர் மூலம் இரண்டு கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

கூப்பனை கொடு பர்கரை சுவை:

கூப்பனை கொடு பர்கரை சுவை:

அதனை பர்கர் கிங்கின் கடையில் கொடுத்து வாடிக்கையாளர்கள் பர்கர்களை பெற்றுகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கு டி-ஷர்ட் ”ப்ரீ”:

முன்பதிவுக்கு டி-ஷர்ட் ”ப்ரீ”:

முன்பதிவு மூலம் உணவு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு டி-ஷர்ட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 1200 பேர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+