காங்கிரஸை துடைத்தெறிந்த மக்கள்.. தனிப்பெரும் கட்சியாகும் பாஜக! காஷ்மீர் கருத்து கணிப்பில் ட்விஸ்ட்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவை சந்திக்கும் எனவும், பாஜக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருமாறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமான பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியே களமிறங்கி உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி என்பது நிலவி வருகிறது. 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
பரிதாபத்தில் காங்கிரஸ்.. முன்னேறிய பாஜக.. காஷ்மீரில் ஆட்சியமைப்பது யார்? Matrize Exit Poll ட்விஸ்ட்
அதன்படி Gullistan News சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காஷ்மீரில் 4 முனை போட்டி 3 முனை போட்டி நிலவுவதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைமை படுமோசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 3 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுக்கே வரும் பாஜக.. காஷ்மீரில் நூலிழையில் மிஸ்ஸாகும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி - Exit Poll Result
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 28 முதல் 30 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு சமமாக பாஜகவும் 28 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இது நடந்தால் ஜம்மு காஷ்மீரில் பாஜக தனி பெரும் கட்சியாக மாறும். அதேபோல் மெகபூபாவின் பிடிபி கட்சி 8 முதல் 16 இடங்களில் தான் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் நிச்சயம் தொங்கு சட்டசபை தான் அமையும். காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி, பாஜக, மெகபூபா முப்தியின் பிடிபி என யாருக்கும் தனி மெஜாரிட்டி என்பது கிடைக்காது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை பொறுத்து தான் ஜம்மு காஷ்மீரில் யார் அரியணை ஏற உள்ளனர்? என்பதை சொல்ல முடியும் என்கிறது GUllistan News கருத்து கணிப்பு முடிவுகள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications