லக்னோவில் 58,844 பேருக்கு ஒரு கழிப்பறை... தகவல் அறியும் சட்டத்தால் வெளியான அதிர்ச்சித் தகவல்!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் 58,844 பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு சகோதரிகள் மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை மிகுந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் சரிவர கழிப்பறை வசதி இல்லாததே இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரில் 58,844 பேருக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்திலேயே கழிப்பறை வசதி உள்ளதாக அம்பலமாகியுள்ளது.

மிகப் பெரிய மாநிலம்...
பரப்பளவிலும், மக்கட்தொகையிலும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம் தான். இதன் தலைநகரான லக்னோவின் மக்கள் தொகை 3 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்...
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஊர்வசி சர்மா லக்னோ முனிசிபல் கார்பரேஷனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அங்குள்ள கழிப்பறைகளின் எண்ணைக்கையை கேட்டு விண்ணப்பித்தார்.

பெண்களுக்கு...
அதில், கிடைத்த தகவலின் படி லக்னோவில் பெண்களுக்கு என பொதுக்கழிப்பிட வசதி கிடையாது என தெரிய வந்துள்ளது.

58,844 பேருக்கு ஒன்று...
மேலும், அங்கு சுமார் 58 844 பேருக்கு ஒரு கழிப்பறை தான் உள்ளது என அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உண்மை நிலவரம் அம்பலமாகியுள்ளது.

இதுவே காரணம்...
இது தொடர்பாக சர்மா கூறுகையில், ‘நான் ஒவ்வொரு நாளும் நடக்கும் குற்றங்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். பொது கழிப்பறைகள் இல்லாததால் இங்கு குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது.இந்த சூழ்நிலை மாநிலத்தின் தலைநகரிலேயே நிலவினால் மாநிலத்தின் கிராம பகுதிகளை எண்ணிப்பாருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications