ஒலிம்பிக் வீராங்கனை கிராமம்.. குடிநீர் வசதி கூட இல்லை.. வாக்குறுதியைக் காப்பாற்றாத மணிப்பூர் அரசு!
இம்பால்: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று மீரா பாய் சானுவின் கிராமத்துக்கு குடிநீர் வசதிகள் உட்பட எந்த வசதிகளும் அரசு இதுவரை செய்துகொடுக்கவில்லை.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் கிராமத்தில் பிறந்தவர் மீரா பாய் சானு. மிகவும் பிந்தங்கிய கிராமம் இது. எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. குடிக்க தண்ணீர், சரியான சாலை வசதிகள் என எதுவும் கிடையாது.
இந்நிலையில், மீரா பாய் சானு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும், அவருக்கு பாராட்டு விழா நடத்தியது மணிப்பூர் பாஜக அரசு. அப்போது மீரா பாய் கிராமத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக அரசு உறுதியளித்தது.

மணிப்பூர்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது.

மீராபாய் கிராமம்
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சிங் கிராமமத்தில் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனையைப் பாராட்ட வந்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ₹ 1.2 கோடி மதிப்பிலான தண்ணீர் தொட்டிகள் கட்டி கொடுப்பதாக உறுதியளித்தார்கள்.

குடிநீர்
2020ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. பாஜக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. "எங்கள் கிராமத்தில், எங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை, குழாய்கள் கூட இல்லை. எனவே, எங்கள் குடும்பத்திற்கு, தண்ணீர் டேங்கர் ஆபரேட்டர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் ₹ 1,000 க்கு குடிநீர் வாங்குகிறோம்" என்று மீரா பாய் சானுவின் தாயார் சாய்கோம் டோம்பி தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி
தண்ணீர் தொட்டி கட்டித்தருவதாக பாஜக வாக்குறுதி கொடுத்தது. அது வாக்குறுதியாக மட்டுமே உள்ளது. குடிநீர் கட்டுமான பணிகள் சுமார் 15 சதவீத கட்டுமானத்திற்குப் பிறகு திட்டத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது மார்ச் 8, 2022 இல் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இதுவரை எந்த வசதிகளும் ஏற்படுட்தவில்லை. இந்த கிராமத்திற்கு ஒரு குழாய் கூட இல்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர்
இந்த கிராமத்தினர் சராசரியாக 500 ரூபாய் முதல் 700 வரை மாதக் கட்டணத்தில் குடிநீருக்காக செலவு செய்கிறார்கள். அருகிலுள்ள குளங்கள், நீரோடைகள் இதிலிருந்து தான் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள் அந்த கிராம மக்கள். ஏறக்குறைய 300 வாக்காளர்களைக் கொண்ட சுமார் 85 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமம் லாம்லாய் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது, இங்கு பாஜக, காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி, ஜேடி மற்றும் ஒரு சுயேட்சை ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications