பாஜகவுக்கு கோடீஸ்வரர்கள்.. காங்கிரஸுக்கு கிரிமினல்கள்.. ம.பி.யில் கலகலக்கும் தேர்தல் களம்
Recommended Video

போபால்: மத்திய பிரதேச மாநில தேர்தலில் பணக்கார வேட்பாளர்களை அதிகளவில் பாஜக களமிறக்கியுள்ளது. அதே வேளையில் காங்கிரஸோ குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இந்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பானது சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2716 வேட்பாளர்களில் 464 பேர் அதாவது 17 சதவீதம் பேர் குற்றவியல் பின்னணி கொண்டவர்கள்.

வழக்கு
16 வேட்பாளர்கள் கொலை குற்றங்களை செய்துள்ளனர். 24 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. 6 வேட்பாளர்கள் மீது கடத்தல் வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்ததாக 20 வேட்பாளர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

யார் மீது
பாஜகவில் 220 வேட்பாளர்களில் 65 பேர் அதாவது 30 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியில் 223 வேட்பாளர்களில் 108 பேர் அதாவது 48 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 206 வேட்பாளர்களில் 43 பேரும் (21 சதவீதம்),பகுஜன் சமாஜ் கட்சியின் 214 வேட்பாளர்களில் 37 பேரும் (17 சதவீதம்) தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிரமாணபத்திரங்களில் தெரிவித்துள்ளனர்.

கொடுங்குற்றவாளிகள்
அதுபோல் பாஜகவில் 220 வேட்பாளர்களில் 38 பேர் அதாவது 17 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியில் 223 வேட்பாளர்களில் 55 பேர் அதாவது 25 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 206 வேட்பாளர்களில் 30 பேரும் (15 சதவீதம்),பகுஜன் சமாஜ் கட்சியின் 214 வேட்பாளர்களில் 22 பேரும் (10 சதவீதம்) தங்கள் மீது கொடுங்குற்றங்கள் புரிந்ததற்கான வழக்குகள் உள்ளதாக பிரமாணபத்திரங்களில் தெரிவித்துள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் யார்
மொத்தம் 2,716 வேட்பாளர்களில் 656 பேர் (24 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். பாஜகவில் 220 வேட்பாளர்களில் 178 பேர் அதாவது 81 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியில் 223 வேட்பாளர்களில் 173 பேர் அதாவது 78 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 206 வேட்பாளர்களில் 38 பேரும் (18 சதவீதம்),பகுஜன் சமாஜ் கட்சியின் 48 வேட்பாளர்களில் 17 பேரும் (35சதவீதம்) ரூ. 1 கோடிக்கும் மேல் சொத்துகளை உடையவர்களாவர்.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications