அடேங்கப்பா.. 'அதானி end.. ரிலையன்ஸ் end..' நம்பர்.1 ஸ்டேடியம் குறித்து ராகுல் காந்தி 'சுளீர்' ட்வீட்
அகமதாபாத்: நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் இரு முனைகளுக்கும் ரிலையன்ஸ், அதானி பெயர் வைக்கப்பட்டது குறித்து ராகுல் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டமைக்கப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் இன்று (பிப்.24) தொடங்கியது.
800 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்ட இந்த ஸ்டேடியம் அகமதாபாத்தில் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இந்த ஸ்டேடியத்தை திறந்து வைத்தார்.

63 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்நிலையில், சர்தார் படேல் என்றிருந்த இந்த ஸ்டேடியத்தின் பெயர், நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டரில்,
உண்மை தன்னைத் தானே எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது அழகாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராகுல்,
நரேந்திர மோடி மைதானம்
- அதானி end
- ரிலையன்ஸ் end
அதுவும் ஜெய்ஷா தலைமையில்"
என்று ட்வீட் செய்துள்ளார்.
Beautiful how the truth reveals itself.
— Rahul Gandhi (@RahulGandhi) February 24, 2021
Narendra Modi stadium
- Adani end
- Reliance end
With Jay Shah presiding.#HumDoHumareDo
மத்தியில் ஆளும் மோடி அரசின் மீது சிலர் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு அரசு துணை போகிறது என்பதே. இந்த சூழலில், ஸ்டேடியத்தின் இரு முனை பெவிலியன்களுக்கும் இரு நிறுவங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் சமூக தளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications