நாகா தீவிரவாதிகளுடன் இணைந்து பணம் பறிப்பு... முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தொடர்பு?
நாகா தீவிரவாதிகளுக்கும் முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) பிரிவு தீவிரவாதிகளுடன் இணைந்து பணம் பறித்ததில் முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகாலாந்து தீவிரவாதிகளுடன் இணைந்து ஜிலியாங் செயல்பட்டது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இதனால் விசாரணைக்கு ஜிலியாங் ஆஜராக என்.ஐ.ஏ. அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் ஜிலியாங் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தமக்கும் தமது முந்தைய அரசுக்கும் நாகா தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என எழுத்துப்பூவமாகவும் பதில் அளித்திருந்தார் ஜிலியாங். இந்நிலையில் ஜிலியாங்குக்கு எதிராக ஆவணங்கள் உள்ளன என்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications