Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் திட்டப்படி ‘தத்தெடுத்த கிராமங்களில்’ நிர்மலா சீத்தாராமன் செய்த சாதனைகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்தாண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்த திட்டம் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா ( SAGY ) திட்டம். அதாவது எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்.

இதன்படி ஒவ்வொரு எம்.பி.யும் கிராமம் ஒன்றைத் தத்தெடுத்து அதனை மேம்படுத்தி, வரும் 2016ம் ஆண்டுக்கிற்குள் முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு.

அதன்படி, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றை முன்மாதிரி கிராமங்களாக்குவதற்கான பணியில் இறங்கினார். தனது சவாலுக்கான களமாக ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துர்ப்பிதாலு மற்றும் வானிகலங்கா எனும் இரண்டு கடற்கரை கிராமங்களை கடந்தாண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி அவர் தத்தெடுத்தார்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்யும் வேலையில், நிர்மலா சீத்தாராமனும் தனது தத்துக் கிராமங்களை எந்தளவிற்கு முன்னேற்றி உள்ளார் என்பதை பார்க்கலாம்.

பல்வேறு நலத்திட்டங்கள்:

பல்வேறு நலத்திட்டங்கள்:

இந்த ஆறு மாத காலத்தில் நிர்மலா சீத்தாராமன் தனது குழுவினருடன் இணைந்து தனது தத்துக் கிராமங்களில் குடிநீர், சுத்தம், சுகாதரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளார். மேலும் பல நல்ல திட்டங்கள் அங்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன.

தூய்மையான குடிநீர்:

தூய்மையான குடிநீர்:

தூய்மையான குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் துர்ப்பிதாலுவில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு ( RO water treatment plant)நிலையங்களையும், வானிகலக்காவில் ஒன்றையும் அவர் நிறுவப் பட்டுள்ளது.

44 பயோ டைஜஸ்டர் கழிப்பறைகள்:

44 பயோ டைஜஸ்டர் கழிப்பறைகள்:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோ டைஜஸ்டர் முறையில் 44 கழிப்பறைகள் அந்த இரண்டு கிராமங்கள் கட்டப்பட்டது.

தனித்தனி குப்பைத் தொட்டிகள்:

தனித்தனி குப்பைத் தொட்டிகள்:

இரு கிராமங்களிலும் தூய்மையையும், சுகாதாரத்தையும் பராமரிப்பதற்காக மக்கும் மற்றும் மக்காதக் குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குப்பைத்தொட்டிகள் வழங்கப்படு உள்ளது.

தொழில்நுட்பப் பயிற்சி:

தொழில்நுட்பப் பயிற்சி:

உப்பளங்கள் அமைப்பது, களான் சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற திறன்சார் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. உப்பள விவசாயிகளுக்கு பழைய முறைகளை களைந்து, அறிவியல் ரீதியில் உப்பு தயாரிப்பதற்கானத் தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

சமூக மையம்:

சமூக மையம்:

வானிலங்கா கிராமத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய சமுக மையம் அமைப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதல் 7ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் , கணினி பயிற்சி நிலையம், பெண்களுக்கான மகிளா பவன், நூலகம், மின்னணு பஞ்சாயத்து, பலபயன்பாட்டு அறை, 24 மணி நேர சூரிய சக்தி மின்சார வசதி போன்றவை இந்த மையத்தில் இருக்கும்.

தேர்வு மையம்:

தேர்வு மையம்:

இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் அதிக தொலைவுக்கு நடந்துச் சென்று தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் ததுர்ப்பிதாலுவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்:

விழிப்புணர்வு முகாம்:

நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில் இரண்டு கிராம மக்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஜன் தன் யோஜனா எனப்படும் அனைவருக்கு வங்கி கணக்கு திறக்கும் திட்டத்துக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசின் 3 நிதி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நம்பிக்கை:

நம்பிக்கை:

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம், பேதமியானவானிலங்கா மற்றும் தூர்புத்துலு ஆகிய இரண்டு கிராமங்களும் இன்னும் ஓராண்டில் மாதிரி கிராமங்களாக வளர்ச்சி அடையும் என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

பரகலாசேஷவதரம் கால்வாய் விரிவாக்கம்:

பரகலாசேஷவதரம் கால்வாய் விரிவாக்கம்:

பரகலாசேஷவதரம் கால்வாயை விரிவாக்கம் செய்து இரண்டு கிராமங்களுக்கு தேவையான நீராதாரத்தை பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த மாதம் 8ம் தேதி துவங்கப்பட்டுள்ளது.

பயோ டைஜஸ்டர் கழிவறை திட்டத்தின் பயன்கள்:

பயோ டைஜஸ்டர் கழிவறை திட்டத்தின் பயன்கள்:

அடுத்தத் தலைமுறை திட்டமான பயோ டைஜஸ்டர் கழிவறை திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் பெருகுவதோடு, மாசும் குறையும். மேலும், பயோ டைஜஸ்டர் கழிவறை திட்டத்தின் மூலம் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

டிரை சைக்கிள்கள்:

டிரை சைக்கிள்கள்:

ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக மொத்தம் 12 கண்காணிப்பாளர், குப்பைகளை சேகரித்து, பிரித்து சுத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு குப்பைகளை சேகரிப்பதற்காக டிரை சைக்கிள்கள் வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+