பஞ்சாப்பில் மூத்த பத்திரிகையாளர் தாயாருடன் படுகொலை!
பஞ்சாப்பில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜெ.சிங் மற்றும் அவரது தாய் குர்சரண் கவுர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: பஞ்சாப்பில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜெ.சிங் மற்றும் அவரது தாயார் குர்சரண் கவுர் ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றனர். அண்மையில் கர்நாடகவைச் சேர்ந்த கௌரி லங்கேஷ் வீட்டு வாசலில் வைத்து மர்மநபர்களால் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜெ சிங் அவரது இல்லத்தில் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது தொண்டைப் பகுதியில் கத்தியால் கிழித்துள்ளனர். அவரது தாயார் குர்சரண் கவுரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது வீட்டில் இருந்த எல்சிடி டிவி, கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொள்ளைச் சம்பவத்தால் இம்மரணம் நிகழ்ந்தது என செட்டப் செய்துள்ளனர் என போலீஸ் கண்காணிப்பாளர் ஹெச்.எஸ். அத்வால் கூறியுள்ளார். ஆனால், கே.ஜே சிங்கின் பர்ஸில் இருந்த 25,00 ரூபாய் பணமும் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியும் அப்படியே இருந்துள்ளது சந்தேகத்தை அதிகரிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
கேஜெ சிங்கின் தங்கை யாஷ்பால் கவுர் அவரது மகனும் அவர்களுக்கு மதிய உணவு கொண்டு வந்த போதுதான் இந்தக் கொலைகளைக் கண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கே.ஜெ. சிங்கும் அவரது தாயாரும் படுக்கையறையில் பிணமாகக் கிடந்துள்ளனர்.
கே.ஜெ. சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி டிரிப்யூன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். இந்த கொலையை விசாரிக்க சிறப்பு படையை அமைக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications