ஷாக்.. தலித் நபரை ‛ஷூ’ நக்கவைத்த காங்., எம்எல்ஏ? தலையில் சிறுநீர் கழித்த டிஎஸ்பி.. ராஜஸ்தானில்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் நபரை காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் தனது ‛ஷூ'வை நக்க வைத்ததோடு, போலீஸ் டிஎஸ்பி அவரது தலையில் சிறுநீர் கழித்ததாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாம்வா ராம்கர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக கோபால் மீனா உள்ளார். அதேபோல் அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் சிவ்குமார் பரத்வாஜ்.
இந்நிலையில் தான் எம்எல்ஏ கோபால் மீனா, சிவ்குமார் பரத்வாஜ் ஆகியோர் தலித் சமுதாயத்தை சேர்ந்த 51 வயது நபரை துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் உள்பட போலீஸ்காரர்கள் சென்றுள்ளனர். போலீசார் சிவ்குமார் பரத்வாஜை தாக்கி அங்கிருந்து இழுத்து சென்றுள்ளனர். மேலும் டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ், தலித் சமுதாயத்தை சேர்ந்தவரின் தலையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதோடு காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் வர்மா ஷூவை நக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் விடாமல் போலீஸ் நிலையம் சென்று வந்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
அதோடு அவருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் அடிக்கடி காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனாவின் பெயரை கூறி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புகார் அளித்தால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் வழங்கிய புகாரில் டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் தனது தலையில் சிறுநீர் கழித்ததாகவும், காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா நாக்கால் ஷூவை நக்கி சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எப்ஐஆரில் காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா, டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் தலையில் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து தவறு செய்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் தான் தற்போது ராஜஸ்தானில் இந்த ஷாக்கான சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications