கெட்டிகாரர் கெலாட்.. 2018ல் ராஜஸ்தானில் வெறும் அரை சதவீதத்தில் ஆட்சியை பறிகொடுத்த பாஜக

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: 2018ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் அரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில நடந்ததை போல ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடந்த போதும், கெட்டிக்காரரான முதல்வர் கெலாட் அதை சமார்த்தியமாக முறியடித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 101 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியமைக்க முடியும். கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது.

 In the 2018 assembly elections in Rajasthan, the BJP lost power by a margin of just half a percent

2018ம் ஆண்டு நடந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட் தலைமையில் எதிர்கொண்டது. பாஜக வசுந்த்ரா ராஜே சிந்தியா தலைமையில் எதிர்கொண்டது. இதில் காங்கிரஸ் கட்சி 2013 தேர்தலைவிட 79 தொகுதிகள் அதிகம் வென்று, அதாவது 100 தொகுதிகளை வென்றது. வசுந்த்ரா ராஜே தலைமையிலான பாஜக 73 இடங்களில் வென்றது. அதாவது கடந்த 2013ம் ஆண்டைவிட 90 இடங்களில் குறைவாக வென்றது. சுயேட்சைகள் 13 இடங்களில் வென்றனர். பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களில் வென்றது. ராஷ்ட்ரிய லோக்தன்ரிக் கட்சி 3 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும், பாரதிய டிரைபல் கட்சி 2 இடங்களிலும். ராஷ்ட்ரிய லோக் தல் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இதில் 100 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் பெற்ற ஒட்டுகளை எண்ணிக்கையை பார்த்தால், 1 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 201 வாக்குகள் பெற்று இருந்தது. இரண்டாவது இடத்தை பிடித்த பாரதிய ஜனதா கட்சி 1 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 502 வாக்குகள் பெற்று 73 இடங்களில் வென்று இருந்தது. சுயேட்சைகள் 6 பேர் சேர்ந்து 33 லட்சத்து 72 ஆயிரத்து 206 வாக்குகள் பெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்குமான வாக்கு சதவீத வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவு ஆகும்.

காங்கிரஸ் 39.30 சதவீதம் வாக்குகளும், பாஜக 38.77 சதவீதம் வாக்குகளும் பெற்றிருந்தன. அதாவது. 0.53 சதவீதம், வெறும் அரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கட்சியிடம் 2018ம் ஆண்டில் ஆட்சியை பறிகொடுத்திருந்தது. 1,77,699 பேர வாக்குகளை ராஜஸ்தானில் பாஜக கடந்த 2018ம் ஆண்டில் கூடுதலாக வாங்கி இருந்தால் ஆட்சியே மாறி இருந்திருக்கும். ஆனால் சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி பிரிந்த ஓட்டுகளால் பாஜக வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் போனது.

கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில நடந்ததை போல ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடந்த போதும், கெட்டிக்காரரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அதை சமார்த்தியமாக முறியடித்தார். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா போல் ராஜஸ்தானில் சச்சின் பைலைட் போர்க்கொடி உயர்த்திய போது, தனது நீண்ட அரசியல் அனுபவத்தால், அதை முறிடியத்தார். சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் உறுப்பினர்களை காங்கிரஸில் இணையவைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை அதாவது 2023ல் ராஜஸ்தானில் தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என பாஜக ஆழமாக நம்புகிறது. அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது இன்று மதியமே தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+