பயங்கர ஷாக்.. ஒரேயொரு நொடி தான்.. திடீரெனவெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்! 10 பேர் பலி.. துயரம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் (மின்மாற்றி) போலீஸ்காரர் உள்பட 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் டிரான்ஸ்பார்மர் அருகே நின்ற போலீஸ்காரர் உள்பட 10 பேர் பலியாகினர். மேலம் பலத்த காயமடைந்து பலர் உயிருக்கு போராடினார்கள். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் கதறினர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்யப்பட்டது. விரைவாக ஆம்புன்ஸ் வாகனம் வந்தது.
இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மின்வாரிய பணியாளர்கள், அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் டிரான்ஸ்பார்மர் வெடிப்புக்கான சரியான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ‛‛டிரான்ஸ்பார்மர் வெடித்தததில் பிபால்கோட்டி அவுட்போஸ்டில் பணியாற்றி போலீஸ்காரர் உள்பட மேலும் சிலர் இறந்துள்ளனர்'' என்றார். இதுபற்றி சாமோலி மாவட்ட எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறுகையில், ‛‛டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 10 பேர் இறந்துள்ளனர'' என இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications