ச்சீ! 5 ஸ்டார் ஹோட்டலில் லேடீஸ் பாத்ரூமில் வைத்து.. 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும் பெரிய பலன் இல்லை.

அதிலும் சமீப காலங்களாகச் சிறார்களே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதேபோன்ற அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது உத்தரகண்ட் மாநிலத்திலும் நடந்துள்ளது.

 உத்தரகண்ட்

உத்தரகண்ட்

உத்தரகண்ட்டின் டேராடூன் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அந்த 5 நட்சத்திர விடுதியில் தான் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண் அன்றைய தினம் காலை 9.30 மணி அளவில் லேடீஸ் பாத்ரூமில் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அச்சிறுவன் லேடீஸ் பாத்ரூமில் அத்துமீறி நுழைந்துள்ளான். அப்பெண்ணிடன் ஹாய் எனக் கூறி பேச்சைத் தொடங்கி உள்ளான்.

 லேடீஸ் டாய்லெட்

லேடீஸ் டாய்லெட்

அச்சிறுவன் உடன் பேச அந்தப் பெண் விரும்பவில்லை. இருந்த போதிலும், அச்சிறுவன் தொடர்ந்து பேசி வந்துள்ளான். லேடீஸ் டாய்லெட்டில் நுழைந்தது ஏன் என கேட்ட அப்பெண், விடுதிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களுடன் பேசக் கூடாது என்று விதி உள்ளதால் உடனடியாக கழிவறையை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். தொடர்ந்து அச்சிறுவன் பேசிக் கொண்டே இருந்துள்ளான்.

 பலாத்காரம்

பலாத்காரம்

ஒரு கட்டத்தில் திடீரென கழிவறையை உள்ளே இருந்து பூட்டிய சிறுவன், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது உதவி கேட்டு அப்பெண் சத்தம் போட்ட போதிலும், கதவு மூடப்பட்டு இருந்ததால் அவரது சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை. இதை அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சிறுவனின் தந்தை இந்த சம்பவத்தைப் புகார் அளிக்காமல் விட்டுவிட்டுக் கூறி பணம் கொடுக்க முன்வந்ததாகவும் கூறி உள்ளார்.

 சிறுவன் கைது

சிறுவன் கைது

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் டேராடூனில் உள்ள இந்த நட்சத்திர விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். 24 வயதாகும் அப்பெண்ணுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 சத்தீஸ்கர் சிறுவன்

சத்தீஸ்கர் சிறுவன்

குற்றம் சாட்டப்பட்ட மைனர் சிறுவன் சத்தீஸ்கரை சேர்ந்தவர் என்றும் அவர்கள் குடும்பம் அங்கு முக்கிய கட்டுமான நிறுவனத்தை வைத்துள்ளது. அவர்களின் குடும்பம் கடந்த இரண்டு நாட்களாக ஹோட்டலில் தங்கி இருந்துள்ளது. அன்று மதியம் அவர்கள் ஹோட்டலில் இருந்து கிளம்ப இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஹரித்துவாரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

 செல்வாக்கு மிக்க குடும்பம்

செல்வாக்கு மிக்க குடும்பம்

இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெண்ணின் மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இந்த சம்பவத்தில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கப் போவதாக ஹோட்டல் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+