அதிகரிக்கும் பலாத்காரங்கள்: 'மகளிர் மட்டும்' பஸ்ஸை நாடும் பெண்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து மகளிர் மட்டும் பேருந்துகள், டாக்சிகள், பூங்காக்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை வயது வித்தியாசம் இன்றி பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனால் மகளிர் மட்டும் பேருந்துகள், டாக்சிகள், ஹோட்டல் தலங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

மகளிர் மட்டும் வங்கி

மகளிர் மட்டும் வங்கி

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் மகளிர் மட்டும் வங்கி வரும் நவம்பர் மாதம் மத்திய அரசால் துவங்கப்பட உள்ளது. இது போன்று நாடு முழுவதும் 100 வங்கிகளை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிம்மதி

நிம்மதி

மகளிர் மட்டும் பேருந்து, டாக்சிகளால் ஆண்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று பெண்கள் கருதுகின்றனர்.

மகளிர் பெட்டி

மகளிர் பெட்டி

ரயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இருபாலரும் சேர்ந்து பயணிக்கும் பெட்டிகளில் ஆண்களின் பார்வையும், அவர்களின் நடவடிக்கையும் பயத்தை அளிப்பதாக பெண்கள் கூறுகிறார்கள்.

மகளிர் பூங்கா

மகளிர் பூங்கா

கோவையில் பெண்களுக்காக மட்டும் பூங்கா திறக்கப்பட உள்ளது. மேலும் பெண் ஃபிட்னஸ் பயிற்ச்சியாளரை வைத்து பெண்களுக்காக ஜிம் திறக்கப்படவிருக்கிறது.

பேருந்துகள்

பேருந்துகள்

அஸ்ஸாம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் மகளிர் மட்டும் பேருந்து லைன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

பெண்களுக்கு என்று தனி தலங்களை ஒதுக்குமாறு சுற்றுலாத் துறை சிறிய ஹோட்டல்களை வலியுறுத்தத் துவங்கியுள்ளது.

ஆண்கள் தான் மாறணும்

ஆண்கள் தான் மாறணும்

பெண்கள் இப்படி மகளிர் மட்டுமை தேடிச் செல்வது நல்லதல்ல. மாற வேண்டியது பெண்கள் அல்ல ஆண்கள் தான் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+