டீச்சருக்கு எச்ஐவி.. துளி ரத்தம்கூட மேல பட்டுடக்கூடாதாம்.. அதுக்குன்னு இப்படியா? அறியாமையின் உச்சம்

திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவதை போல எச்ஐவி பாதிக்கப்பட்டவரின் ஒரு துளி ரத்தம் பட்டாலே மற்றவருக்கும் நோய் தொற்றிவிடும் என்று சொல்லப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரை நீண்ட விடுமுறையில் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு ஆசிரியர் பணிக்காக ஒருவர் புதியதாக சேர்ந்திருக்கிறார். இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இருந்ததில்லை. வேலை விஷயத்தில் மிகவும் நேர்த்தியாக நடந்துகொள்ளும் இவரை சமீபத்தில் பள்ளி நிர்வாகம் நீண்ட விடுமுறையில் அனுப்பி வைத்திருக்கிறது. இது குறித்து பள்ளி செயலாளரிடம் விசாரிக்கையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயலாளர் ரனாஜித் மண்டல் கூறியதாவது, "அவருடைய பணியில் எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் வேலைக்கு சேர்வதற்கு முன்னர் தனக்கு இப்படியான பாதிப்பு இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலையும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. தற்போது இந்த விஷயம் வெளியில் கசிந்திருக்கிறது. எனவே பெற்றோர்களும் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பயப்படுகிறார்கள். ஆகவேதான் நாங்கள் அவரை விடுப்பில் அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

காரணம்

காரணம்

மேலும், "நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள குழந்தைகளைக்கு எளிதில் கீழே விழுந்து காயமடையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல ஆசிரியருக்கும் எதிர்பாராமல் காயம் ஏற்பட்டு அதன் மூலம் வெளியேறும் ரத்தம் குழந்தைகளின் ரத்தத்துடன் கலந்துவிட்டால் அவர்களுக்கும் நோய் தொற்றிக்கொள்ளும். இந்த காரணங்களை அடிப்படையாக வைத்துதான் இம்முடிவுக்கு வந்திருக்கிறோம். ஆசிரியரின் வேலை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்" என்று பள்ளியின் செயலாளர் ரனாஜித் மண்டல் கூறியுள்ளார்.

விளக்கம்

விளக்கம்

எச்ஐவி நோயானது உடலுறவு மற்றும் ரத்தம் வழியாக தவிர வேறெந்த வகையிலும் பரவாது என்று கூறப்பட்டாலும் இது குறித்த அச்சம் பலருக்கும் இருக்கிறது. இந்த சந்தேகம் குறித்து மருத்துவர்கள் கூறுவதாவது, "எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து நோய் பரவுவது குறித்து போதுமான விழிப்புணர்வு பொதுச்சமூகத்திடம் இருப்பதில்லை. நோய் பாதிப்புள்ள ஒருவருடன் நிச்சயம் சாதாரண மனிதர்கள் சேர்ந்து வாழ முடியும். அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை, துணி, பாத்திரங்கள் போன்ற பொருட்களையும் நோய் பாதிப்பற்றவர்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் நோய் பரவாது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து உணவருந்துவது, அவருக்கு முத்தம் கொடுப்பது போன்றவற்றால் கூட இந்நோய் பரவாது.

வதந்தி

வதந்தி

அதேபோல மற்றொரு பெரிய வதந்தி என்னவெனில் எச்ஐவி பாதிக்கப்பட்டவரின் ரத்தம் நம்முடைய காயங்கள் மீது பட்டாலே நமக்கும் நோய் பரவிவிடும் என்பதுதான். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும். அதாவது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் அதிக அளவில் வெளியேறினால்தான் அது பாதிக்கப்படாத மனிதரின் உடலுக்குள் நுழையும். அதேபோல பாதிக்கப்படாதவர்களின் ரத்தமும் அதிக அளவில் வெளியேற வேண்டும். அப்போதுதான் ஒருவரின் ரத்தம் மற்றொருவரின் ரத்த ஓட்டத்திற்குள் நுழைய முடியும். இப்படி ஒரு விபத்து கற்பனையில்தான் சாத்தியம். நிஜத்தில் அல்ல" என்று கூறியுள்ளார்.

சட்டம்

சட்டம்

இந்த சம்பவம் குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுகையில், "நோயால் பாதிக்கப்பட்டவர் வழக்கமாக பரிசோதனைக்கு செல்வார். அப்படி இருக்கையில் அவரை பரிசோதிக்கும் மருத்துவர்கள் உடல் நிலை குறித்து சில அறிவுரைகளை வழங்குவார்கள். அதேபோல பொது வேலைகளில் இவர்கள் எப்போது ஈடுபடக்கூடாது என்பதும் மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்நிலை வந்ததால் நோய் பாதிக்கப்பட்ட நபர்களாலேயே தங்களது பணியை சரியாக மேற்கொள்ள முடியாது. ஆனால் இதற்கு முன்பாக நல்ல நிலைமையில் உள்ளவர்களை ஒதுக்கும் விதமாக அவர்களை பணியிலிருந்து நீக்குவது என்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு" என்று கூறியுள்ளனர். இருப்பினும் பள்ளி செயலாளர் மீது எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+