பெங்களூர்: தோழியை கணவர் பலாத்காரம் செய்ய அதை பார்த்து ரசித்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரின் புறநகர் பகுதியான கங்கம்மன்குடியைச் சேர்ந்தவர் தீபக்(28). கேபிள் ஆபரேட்டர். அவரது மனைவி ஆஷா(25). ஆஷாவுக்கு தனது கணவர் யாருடனாவது உறவு கொள்வதை நேரில் பார்க்க வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதை தனது கணவரிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஆஷா தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தனது தோழி ராணியிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கணவருடன் உறவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு ராணி மறுக்கவே அவரை வற்புறுத்தி வந்துள்ளார் ஆஷா. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி ராணியின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். இதையடுத்து தீபக் ராணியை பாலியல் பலாத்காரம் செய்ய அதை பார்த்து ரசித்துள்ளார் ஆஷா.

ராணி தனது கணவர் திரும்பி வந்தவுடன் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சில நாட்கள் தங்களின் சொந்த ஊரான தும்கூருக்கு சென்றுவிட்டனர். கடந்த 10ம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது ஆஷா ராணியை பார்த்து விலை மாது என்று கூறியதுடன், இந்த தொழில் எவ்வளவு சம்பாதித்தாய் என்று கேட்டுள்ளார்.

இதனால் ராணி, அவரது கணவர் மற்றும் தீபக், ஆஷா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷா, தீபக் ஆகியோரை கைது செய்தனர்.

கணவனை தனது தோழியை பலாத்காரம் செய்ய தூண்டிய குற்றத்திற்காக ஆஷா கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+