என்ன இது? கோபத்தின் உச்சிக்கே போன விராட் கோலி.. அந்த ஒரு பார்வை.. மேட்சில் நடந்த பரபர சம்பவம்
அகமதாபாத் பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் டெல்லி பிட்ச் அளவிற்கு ஸ்பின் ஆகவில்லை.
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி திடீரென கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடந்தது. இதில் மோசமான ஆட்டம் காரணமாக.. முக்கியமாக பேட்டிங் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது?
பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் டெல்லி பிட்ச் அளவிற்கு ஸ்பின் ஆகவில்லை. அதனால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் எளிதாகவே எதிர்கொண்டனர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. குவாஜா மட்டும் 180 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தார். அஸ்வின் இதில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கோலி
புஜாரா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் சுப்மான் கில் நிதானமாக ஆடினார். இவர் 235 பந்துகளில் 128 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 பவுண்டரி அடக்கம். அதேபோல் 1 சிக்ஸ் அடித்துள்ளார். மிக நேர்த்தியான டெஸ்ட் வீரராக அவரின் ஆட்டம் இவரின் இருந்தது. அதோடு பால்ஸ் ஷாட் மிக மிக குறைவாக இருந்தது. இந்த வருடத்தில் இதோடு கில் அடிக்கும் 5வது சர்வதேச சதம் இது. இன்னொரு பக்கம் நிதானமாக ஆடிய கோலி சதம் அடித்தார்.

ஆட்டம்
இது அவரின் 28வது டெஸ்ட் போட்டியாகும். அதேபோல் 75வது சர்வதேச சதம் ஆகும். இன்று மிகவும் நிதானமாக ஆடி 256 பந்துகளில் 110 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மிக மிக நிதானமாக ஆடிய விதம் கவனிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 419-5 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா 61 ரன்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் டிராவை நோக்கி செல்வது போல் உள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம். இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இதனால் மேட்ச் டிரா ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன

கோபம்
இன்றைய மேட்சில் கோலி திடீரென ஸ்ரீகர் பரத் மீது கோபம் அடைந்தார். 67 ரன்கள் இருந்த நிலையில் கோலி அடித்துவிட்டு ஓட முயன்றார். அப்போது ஸ்ரீகர் பரத் தான் ரன் ஓட அழைத்தார். ஆனால் பாதி கிரீஸ் தாண்டிய பின் ஸ்ரீகர் பரத் ரன் ஓடாமல் பின்னாடி சென்றார். இதனால் பாதி வழியில் கோலி திரும்பி சென்றார். அதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதையடுத்து கோலி அப்படியே திரும்பி ஸ்ரீகர் பரத்தை கோபமாக பார்த்தார். ஏன் இப்படி பின்வாங்கினாய் என்பது போல கோபமாக பரத்தை பார்த்து முறைத்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications