கறுப்பு பணத்தை தடுக்க ரூ. 4500 பணம் மாற்றுபவர்கள் விரலில் அழியாத மை- சக்தி காந்த தாஸ்
வங்கியில் ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதை தடுக்கும் வகையில் தேர்தலைப் போல விரலில் அழியாத மை வைக்க முடிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 1 வாரமாகியும் அவற்றை வங்கிகளில் மாற்ற முடியாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளிலும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரியாக இயங்காத ஏடிஎம் மையங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். பல இடங்களில் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலான ஏடிஎம் மைங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கடந்த 1 வார காலமாக பணம் எடுக்க முடியாமல் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நடமாடும் ஏடிஎம் மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் ஏடிஎம் மையங்களிலும் கூட்டத்திற்கு குறையில்லை. பணப் புழக்கம் இல்லாததால் அனைத்து தரப்பினருமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பல்வேறு நபர்கள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. வங்கிக்கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்தாமல் அதனை மாற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வங்கிக்கு வந்து ரூ. 4500 பணத்தை மாற்றுபவர்கள் கைகளில் அழியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதல் இது நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
ஜன்தன் கணக்குகளில் குறிப்பிட்ட அளவே டெபாசிட் செலுத்த முடியும். 49000 ரூபாய் ஜன்தன் கணக்குகளில் பணத்தை செலுத்த முடியும். அதையும் கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிகளில் போதிய அளவு பணம் உள்ளது. எந்த வித வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்பு எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications