முடிச்சிட்டாங்க.. ஜார்கண்ட்டில் ‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு.. யாருக்கு எத்தனை சீட்?
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு கடும் இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை நடத்தி வருகிறார். ஹேமந்த் சோரன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13, நவம்பர் 20 என 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் மீண்டும் ‛இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது.
இந்த ‛இந்தியா' கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளன. கூட்டணி பங்கீட்டில் கடும் இழுபறி நிலவி வந்தது. வேட்புமனுத்தாக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஒருவழியாக கூட்டணி பங்கீடு முடிவுக்கு வந்தது.
அதன்படி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 6 இடங்களும், இடதுசாரிகளுக்கு 3 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தான்வார், சத்ராபூர், விஷ்ராம்பூர் தொகுதிகளில் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். ஜார்கண்ட்டை பொறுத்தவரை பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முன்னதாக கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் பாஜக 25 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றது. அதேபோல் ஜேவிஎம்(பி) கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது அமைந்தது. ஆட்சியை பிடிக்க 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் இந்த கூட்டணிக்கு 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications