Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா அனுப்பும் ஆர்மி டீம்.. லடாக் எல்லையில் எப்படி பேச்சுவார்த்தை நடக்கும்? என்ன பேச போகிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் பேசப்படும், மீட்டிங் எப்படி நடக்கும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    இந்தியா-சீனா பேச்சுவார்த்தை..லடாக் எல்லை பிரச்சினை தீர்வு எட்டப்படுமா?

    இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் இன்று மிக முக்கியமான நாள் ஆகும். இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் முட்டலும் மோதலுமாக இருக்கும் நிலையில் இன்று லடாக்கில் முக்கியமான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    லடாக் எல்லையில் பாங்காங் திசோ பகுதிக்கு அருகே இரண்டு நாட்டு ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் இவர்கள் பேச இருக்கிறார்கள்.

    நல்ல தொடக்கம்

    நல்ல தொடக்கம்

    இன்று நடக்கும் இந்த மீட்டிங் என்பது அமைதிக்கான முதல்படியாகும். அதாவது எல்லையில் நடக்கும் சண்டைகளை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது. ஆனால் இன்று நடக்கும் பேச்சுவார்த்தை மூலம் முழு முடிவு ஏற்படாது. இந்தியா - சீன சண்டை அப்படியே முடிவிற்கு வராது. ஆனாலும் இன்று நடக்கும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக இருக்கும்.

    யார் பேசுகிறார்

    யார் பேசுகிறார்

    இன்று நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் அதிகாரி ஹரீந்தர் சிங் லடாக் எல்லைக்கு செல்கிறார். இன்று இவர்தான் பேச்சுவார்த்தையை தொடங்குவார். இந்த ஆலோசனையில் இவர்தான் முதலில் பேசும் நபராக இருப்பார். அதன்பின் சீனாவின் லெப்டினன் ஜெனரல் அதிகாரி பேசுவார். சுசுல் மோல்டோ பகுதியில் பாங்காங் திசோ அருகே இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

    ஆர்மி டீம்

    ஆர்மி டீம்

    இந்தியா அனுப்பும் இந்த டீமில் இந்திய ராணுவத்தின் 3வது படைப்பிரிவு அதிகாரிகள் இருப்பார்கள். அந்த படையின் தலைவர் இதில் இருப்பார். அதேபோல் கமாண்டர் ரேங்க் கொண்ட அதிகாரி ஒருவர் இருப்பார். உள்ளூர் படையின் கமாண்டர் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் இதில் உடன் இருப்பார். இதில் உறுதியாக என்ன விஷயங்களை இன்னும் பேச போகிறார்கள் என்று தெரியவில்லை.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    இந்த மீட்டிங்கில் இரண்டு நாட்டின் கவனமும் கிழக்கு லடாக் மீதுதான் இருக்கும் என்கிறார்கள். கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் பாங்காங் திசோ நதி, ஹாட் ஸ்பிரிங் பகுதி, கல்வான் பகுதி, கர்வான் பகுதி ஆகிய இடங்களில் நிலவும் மோதல் குறித்து ஆலோசனை செய்வார்கள். இரண்டு நாட்டு படைகளும் பின் வாங்க வேண்டும். தங்களின் பழைய இடத்திற்கே செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

    என்ன ஆயுதங்கள்

    என்ன ஆயுதங்கள்

    அதேபோல் இரண்டு நாட்டு படைகளும் தங்களின் நவீன ஆயுதங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். பதுங்கு குழிகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். அதேபோல் பாங்காங் திசோபகுதியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் 8 இடங்களில் 4 இடங்களை சீனாவும், 4 இடங்களை இந்தியாவும் கட்டுப்படுத்த வேண்டும். இங்கு எல்லை மீற கூடாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+