For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவை கடுமையாக எச்சரித்த இந்தியா

Google Oneindia Tamil News

லடாக்: கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை விலக்கி கொள்ளும் புரிந்துணர்வை செயல்படுத்தத் தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகிறது. அண்மையில் அத்துமீறி கூடாரம் அமைத்த சீன ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் சண்டை போட்டனர்.

இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிகையை வெளியிட சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது?ஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது?

சீனா படை குவிப்பு

சீனா படை குவிப்பு

இதற்கிடையே கடந்த மே மாதம் முதலே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து ஏராளமான படைகளை ஆயுதங்களை சீனா தொடர்ந்து குவித்து வருகிறது. ஒரு பக்கம் சண்டை வேண்டாம் சமாதானமாக போகலாம் என்று கூறும் சீனா, மறுபக்கம் படைகளை குவித்து ஆயுதங்களையும் குவிப்பது இந்தியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவுக்கு எச்சரிக்கை

சீனாவுக்கு எச்சரிக்கை

சீனாவின் இந்த தொடர் அத்துமீறல் மற்றும் அடாவடி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யிடம் பேசும் போது வெளிப்படையாக எச்சரித்து கண்டித்தார். இதனிடையே அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்களில் சீனா படைகளை குவிப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை விலக்கி கொள்ளும் புரிந்துணர்வை செயல்படுத்தத் தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

இந்தியா ஒப்புதல்

இந்தியா ஒப்புதல்

மே மாத தொடக்கத்தில் சீன இராணுவத்தின் படை குவிப்பு தொடங்கிய பின்னர் முதல் தடவையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஐசி) பகுதியில் சீனாவின் படை குவிப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட அறிக்கையில, சீனப் படைகளின் நடத்தை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் "முற்றிலும் புறக்கணிப்பதாக" உள்ளது என்று கடுமையான எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்,

கள எதார்த்தம் என்ன

கள எதார்த்தம் என்ன

இதனிடையே கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது, மேலும் சீனா படைவிலகல் ஒப்பந்தத்தை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதையும் இந்திய பார்த்து வருகிறது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தனது உரிமை மற்றும் நலன்களை இந்தியா எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காது என்ற கள எதார்த்தத்தை சீனா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

வெளியுறவுத்துறை

வெளியுறவுத்துறை

அண்மையில் ஷியோக்கில் ஒரு பாலம் அமைக்கும் பணியை கைவிட்டது போன்று சீன துருப்புக்கள் பின்வாங்க வேண்டும் என்று இந்திய வலியுறுத்தி வருகிறது எல்லையை மீறுவது மற்றும் இந்திய பிரதேசத்தில் ஊடுருவுவது போன்ற தந்திரமான செயல்களில் ஈடுபடுவது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை விரிசலுக்கு வழிவகுக்கும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    India - க்கு ஆதரவாக களமிறங்கிய America... மிரண்டு போன China

    English summary
    India warned China that failure to implement the disengagement understanding on the LAC in eastern Ladakh would have consequences.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X