7 மாதங்களில் இல்லாத உச்சம்.. 750ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு.. தென்மாநிலங்களில் நிலைமை மோசம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குளிர் காலம் என்பதாலும் புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவாலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்களை அளித்திருந்தது.
7 மாதங்களில் இல்லாத உச்சம்: இதற்கிடையே இன்று ஒரே நாளில் இந்தியாவில் 752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான அதிகபட்ச கொரோனா கேஸ்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த மே 21ஆம் தேதி தான் அதிகபட்சமாக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நமது நாட்டில் இப்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3,000ஐ தாண்டி இருக்கிறது. இந்தியாவில் இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,420ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய ஜேஎன் 1 கொரோனா வகை பொதுமக்களிடையே ஏற்கனவே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பும் அதிகரிப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு: மேலும், காலை 8 மணி வரையிலான தகவல்படி, 24 மணி நேரத்தில் நமது நாட்டில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நமது நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5,33,332ஆக உயர்ந்துள்ளது. நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.
தென்மாநிலங்கள்: இப்போது நமது நாட்டில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 4.50 கோடியாக (4,50,07,964) உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா (266), கர்நாடகா (70) மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா (15), தமிழ்நாடு (13) மற்றும் குஜராத் (12) ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு 10ஐ தாண்டியுள்ளது.
உயரும் கொரோனா: இது தவிரக் கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியாவில் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று அது 750ஐ தாண்டியுள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்புகள், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் கூட இது குறித்து நாம் இப்போது கவலையடையத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் மாக்ஸ் அணியும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: இப்போது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு ஜேஎன்.1 என்ற புதிய கொரோனா வேரியண்ட் தான் காரணம். இந்த ஜேஎன்.1, கொரோனா ஓமிக்ரான் வேரியண்டின் துணை வகையாகும். இதை உலக சுகாதார அமைப்பும் கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications