ஜூன் 18ம் தேதி இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக ....
டெல்லி: இந்திய விமானப்படைக்கு வரும் ஜூன் மாதம் 18ம் தேதி அன்று முதல் பெண் போர் விமான பைலட் கிடைப்பார் என்று விமானப்படை தளபதி அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
விமானப்படையில் பயிற்சி பெறும் பெண்களில் 3 பேர் போர் விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி பெற்று வருகிறார்கள்.

அவர்கள் பயிற்சியை முடித்து வரும் ஜூன் மாதம் 18ம் தேதி நடக்கும் தேர்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம் விமானப்படையின் முதல் பெண் போர் விமான பைலட் கிடைப்பார்.
போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
போர் விமானங்களை இயக்கும் அளவுக்கு பெண்களுக்கு உடல் வலிமை இல்லை என்று ராஹா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications