இந்தியாவிலிருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளிநாட்டில் குடியேறப்போறாங்களாம்! இந்த நாடுதான் முதல் சாய்ஸ்
டெல்லி: 2024ம் ஆண்டில் மட்டும், இந்தியாவைச் சேர்ந்த சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குண்டை போட்டுள்ளது சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ். ஆனால், ஹேப்பி நியூஸ் ஒன்றும் இருக்கிறது. இந்தியா ஒன்றும் இவர்களை நம்பி இல்லையாம். ஆண்டுதோறும் பல புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி வருகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
"எங்கள் பார்வையில், இந்தியா இழப்பதை விட அதிகமான புதிய கோடீஸ்வரர்களை உற்பத்தி செய்து வருவதால், இந்த இடப்பெயர்வு கவலைக்குரியவை அல்ல" என்று அந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. "மேலும், இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர், நாட்டின் வணிக தொடர்பை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள், இது ஒரு பாசிட்டிவ் அறிகுறியாகும்." என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

என்னதான், செல்வந்தர்கள் இடம்பெயர்ந்தாலும், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிக்கின்றனர். இந்தியாவில் அவர்களின் வணிகங்கள் மற்றும் வீடுகள் தொடர்ந்து இருப்பது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உதவுகிறதாம்.
பல இந்திய கோடீஸ்வரர்களின் முதல் சாய்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 128,000 மில்லியனர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, UAE மற்றும் USA ஆகியவை அவர்களின் அடுத்தடுத்த சாய்ஸ்களாக உள்ளன. இந்த கோடீஸ்வரர்களால் தொடங்கப்பட்ட தொழில்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் பலனளிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான உயர் ஊதிய வேலைகளை உருவாக்கியுள்ளன, இது மில்லியனர்களின் வணிகங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார தாக்கத்தைக் காட்டுகிறது.
ஒரு நாடு அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களை குடியேற்றத்தால் இழக்கிறது என்றால், அது அந்த நாட்டில் கடுமையான பிரச்சனைகளால் இருக்கலாம், ஏனெனில் சிக்கல்கள் ஏற்படும் போதுதான், செல்வந்தர்கள் பெரும்பாலும் வெளியேறுகிறார்கள்.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், புதிய பணக்காரர்கள் உருவாக்குவது கணிசமான அளவில், பொருளாதார பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் கிளிக்கு றெக்கை முழைச்சிடுச்சி வீட்டை விட்டு பறந்து போய்விட்டது என்பது போல பெரும் பணக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு போவதற்குதான் ஆசைப்படுகிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளது இந்த டேட்டா.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications