126 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு!
டெல்லி: பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 126 ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம் பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். அவர் அந்த நாட்டின் அதிபர் ஹாலண்டேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர் பிரான்சிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை பறக்கும் நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.
இனி இந்தியா- பிரான்ஸ் அரசுகள் நேரடி பேச்சு நடத்தி 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 36 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், புதிதாக 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்பட இருப்பதால் 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம்; ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான எல்லா விஷயங்களும் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் இனி ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாது. நேரடியாக பிரான்ஸ் அரசுடனேயே மத்திய அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications