வாஷிங்டனிலிருந்து அறிவிப்பு வந்தது ஏன்? 18 நாட்கள் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தை கூட்டுங்க- காங்கிரஸ்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் மற்றும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை இந்திய ராணுவம் கையில் எடுத்தது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லையோரங்களில் ட்ரோன் தாக்குதல் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்தது. இந்த தருணத்தில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென்று சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதனால் இரு நாடுகளும் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தாக்குதலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இதேபோன்று கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாஷிங்டனில் இருந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த 18 நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நாட்டில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதான கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications