கதறி அழும் பாகிஸ்தான் பெண்கள்.. மத்திய அரசு தந்த சலுகை! வாகா எல்லையில் அதிரடி மாற்றம்.. என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நம் நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக கண்ணீர் மல்க குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானியர்களுக்காக அட்டாரி - வாகா எல்லையில் சலுகை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.

india-relaxes-deadline-and-allows-pakistanis-to-leave-country-until-further-orders-via-attari-waga

இந்த தாக்குதலை கண்டித்து முதற்கட்டமாக சில முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதன்படி சிந்து நதிநீரை நிறுத்துவது, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இதற்காக அட்டாரி - வாகா எல்லை என்பது ஏப்ரல் 30ம் தேதி வரை திறந்து வைக்கப்படும். அதன்பிறகு மே மாதம் 1ம் தேதி முதல் எல்லை முழுவதுமாக அடைக்கப்படும் என்று அறிவித்தது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து முறைப்படி வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து அரசுகளும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. கூட்டம் கூட்டமாக பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் 40 ஆண்டுகளாக நம் நாட்டில் வாழ்ந்த பாகிஸ்தானியர்கள் கண்ணீர் மல்க வெளியேறினர். இந்த பயங்கரவாத தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால் இந்தியரை திருமணம் செய்து இங்கு வசித்து வரும் நிலையில் இப்போது குழந்தைகள், கணவரை விட்டு பிரிந்து பாகிஸ்தான் செல்வது கஷ்டமாக உள்ளது. நாங்கள் தவறு செய்யவில்லை. ஆனாலும் தண்டிக்கப்படுகிறோம் என்று கூறி கதறி அழுதனர்.

இருப்பினும் சிலருக்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆவணங்களில் இருக்கும் பிரச்சனை, இந்தியரை திருமணம் செய்து குடும்பத்துடன் இங்கேயே இருப்பது, தங்களின் குழந்தைகள் இங்கு பள்ளி, கல்லூரியில் படிப்பது உள்பட பல காரணங்களால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியாத நிலை உள்ளது. அவர்கள் வெளியேறாவிட்டால் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆளாகலாம். இதனால் பல பாகிஸ்தானிய மக்கள் நம் நாட்டில் தவிக்கின்றனர்.

இதற்கிடையே இந்தியாவை விட்டு அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான 6 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அட்டாரி - வாகா எல்லை என்பது மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு அதனை செய்யவில்லை.

மாறாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‛‛ கடந்த 24ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் அட்டாரி - வாகா எல்லை ஏப்ரல் 30ம் தேதி மூடப்படும். மே 1ம் தேதியில் இருந்து யாருக்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த உத்தரவில் மனிதாபிமானம் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த எல்லையை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும்'' என்றார். இதன்மூலம் 6 நாள் டைமில் நடைமுறை சிக்கல்களை சந்தித்த பாகிஸ்தானியர்கள் அதனை சரிசெய்து இந்தியாவை விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு செல்லலாம்.

மேலும் கடந்த 6 நாளில் மட்டும் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் என்று 55 பேர் அடங்குவர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்கள் இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+