இந்தியாவில் சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
டெல்லி: இந்தியாவில் 1990ம் ஆண்டிலிருந்து சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறதாம். அதாவது 90ம் ஆண்டு முதல் 123 சதவீதம் வரை அது அதிகரித்துள்ளதாம்.
கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத வகையில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உலக அளவில் 43 சதவீதம் இது குறைந்துள்ளது.
உடல் பருமன், தூக்கமின்மை, சிறுநீரக தொற்று நோய், பக்கவாதம் உள்ளிட்டவற்றுடன் சர்க்கரை வியாதியும் இந்தியாவில் ஆண், பெண்களைப் பபாதிக்கும் நோயாக மாறியுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கவகத்தில் உள்ள மெட்ரிக்ஸ் சுகாதாரக் கழகம் இதுதொடர்பான ஆய்வை வெளியிட்டுள்ளது.

நோய்கள் குறித்து ஆய்வு...
188 நாடுகளைச் சேர்ந்த 310 வகையான நோய்கள் குறித்து இது ஆய்வு செய்துள்ளது. பெரும்பாலும் பணக்கார நாடுகளில்தான் சர்க்கரை வியாதி அதிகம் இருக்கும் என்பார்கள் ஆனல் தற்போது சீனா, இந்தியா, மெக்ஸிகோ போன்ற வளரும் நாடுகளிலும் இது அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

டைப் 2 வகை...
டைப் 2 வகை சர்க்கரை வியாதிதான் வேகமாக பரவி வருகிறது. இது உடல் பருமனுக்குக் காரணமாகும்.

பொருளாதார வளர்ச்சி...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கூட இந்த நோயின் பரவலுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. இந்தியர்களின் வாழ்க்கை முறை கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக மாறி விட்டது.

தூக்கமின்மை...
சாப்பிடும் பழக்கமும் மாறியுள்ளது. தூக்கமின்மையும் அதிகரித்துள்ளது.

உணவுப் பழக்க மாற்றம்...
இந்தியாவில் சர்க்கரை வியாதி வேகமாகப் பரவி வருகிறது. உணவுப் பழக்க மாற்றமே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

மன அழுத்தம்...
வேலை நேரத்தில் ஒரு ஒழுங்கு இல்லாமை, மன அழுத்தம் அதிகரிப்பு, உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்தும் பழக்கம், அதிக அளவில்லா பாஸ்ட் புட் சாப்பிடுவது போன்றையும் பிற காரணங்களாகும்.

இதய நோய்கள்...
இளைஞர்களிடம் இப்போது இதய நோய்கள், ரத்த அழுத்தம், நரம்பியல் நோய்கள், மூட்டு வலி உள்ளிட்ட பல நோய்கள் சர்வ சாதாரணமாக சீக்கிரமே வந்து விடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

டாப் 10 நோய்கள்...
அதேசமயம், மலேரியா, டிபி போன்றவை குறைந்து வருகிறது. அதேசமயம், புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில் இந்தியாவின் டாப் 10 நோய்களில் எட்டாவது இடத்தில் சர்க்கரை நோய் இருந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications