எதற்கும் தயார்.. எந்த தயக்கமும் இல்லை.. சீனாவிற்கு இந்தியா அனுப்பும் மெசேஜ்.. லடாக்கில் செம மூவ்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் நடந்து வரும் எல்லை பிரச்சனையை இந்தியா ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வருகிறது. இந்தியா சீனாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    சீனாவிற்கு Hotline Message அனுப்பிய இந்தியா

    லடாக்கில் மீண்டும் சீனா தனது அத்துமீறலை தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. லடாக்கில் பாங்காங் திசோ அருகே மீண்டும் ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது.

    ஆனால் இந்தியா வேகமாக செயல்பட்டு சீனாவின் ஆக்கிரமிப்பை தடுத்து உள்ளது. அதோடு , சீனாவிற்கு முன்னதாக எல்லையில் பல இடங்களை இந்தியா வேகமாக ஆக்கிரமித்துள்ளது. எல்லையில் ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் இந்தியா தற்போது காய்களை நகர்த்தி வருகிறது.

    லடாக் நிலைமை

    லடாக் நிலைமை

    லடாக்கில் ராணுவ ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலேயே இந்தியா தயாராகிவிட்டது. அப்போதே முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ ரீதியான நடவடிகளுக்கு தயாராக இருக்கிறோம். என்ன நடந்தாலும் அதை இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் என்று ராவத் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதோடு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்பும் என்று உறுதி அளிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மீறியது

    மீறியது

    இதை தொடர்ந்து இந்தியா கணித்தது போலவே எல்லையில் சீனா அத்துமீறியது. சீனாவின் அத்துமீறலை இந்தியா நான்கு விதங்களில் கையாண்டது. முதலில், சீனாவிற்கு முன்பாக இந்திய ராணுவம் எல்லைக்கு சென்றது. சீனாவின் வருகையை உளவு தகவல் மூலம் இந்தியா கண்டுபிடித்தது. சீனாவிற்கு முன் எல்லையை ஆக்கிரமித்து சீனாவை அதிர்ச்சி அடைய வைத்தது. எல்லையில் இனியும் சீனாவின் அத்துமீறலை அனுமதிக்க மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

    இரண்டாவது எப்படி

    இரண்டாவது எப்படி

    இரண்டாவதாக சீனாவுடனான பிரச்சனை இப்போது முடியாது என்று கண்டிப்பாக இந்தியாவிற்கு தெரியும். இதனால் எல்லையில் பாதுகாப்பை இந்தியா அதிகரிக்க தொடங்கி உள்ளது. பெரிய மோதலுக்கு, நீண்ட சண்டைக்கும் தயார் ஆகும் வகையில் இந்தியா எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சீனா தாக்கினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். திருப்பி தாக்குவோம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தனது ராணுவ நிலைப்பாட்டை சீனாவிற்கு இந்தியா அதிரடியாக தெரிவித்துவிட்டது.

    மூன்றாவது நிலை

    மூன்றாவது நிலை

    மூன்றாவதாக சீனாவிற்கு பொருளாதார ரீதியான நெருக்கடிகளை இந்தியா கொடுத்து வருகிறது. சீனாவின் நிறுவனங்கள், செயலிகளை தடை செய்து வருகிறது . இதன் மூலம் எல்லை பிரச்சனை லடாக்கில் மட்டும் முடிந்து போகாது. இது மொத்த உறவை பாதிக்கும். பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் சீனாதான் மோசமாக பாதிக்கும். மொத்தமாக உங்கள் பொருளாதாரம் முடங்கும் என்று சீனாவிடம் இந்தியா சொல்லாமல் சொல்லிவிட்டது.

    நான்காவது

    நான்காவது

    நான்காவதாக, இந்திய உலக நாடுகளின் நட்பு மூலம் சீனாவிற்கு சர்வதேச அழுத்தத்தை இந்தியா கொடுத்து வருகிறது. ஏசியன் நாடுகளின் ஆதரவு முழுக்க இந்தியாவிற்கு உள்ளது. அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு உள்ளது. தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா உள்ளது. இதன் மூலம் சீனாவை உலகில் தனிமைப்படுத்த வேண்டிய பணிகளை இந்தியா வேகமாக செய்து வருகிறது.பாகிஸ்தான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

    மெசேஜ் என்ன

    மெசேஜ் என்ன

    இதன் மூலம் சீனாவிற்கு இந்தியா வலிமையான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. எல்லையில் அத்துமீறினால் அனைத்து வகையிலும் சீனாவிற்கு பதிலடி கொடுக்கப்படும். ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று இந்தியா சொல்லாமல் சொல்லி உள்ளது. சீனாவும் இதை புரிந்து கொண்ட காரணத்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போது முயன்று வருகிறது.

    ரஷ்யா எப்படி

    ரஷ்யா எப்படி

    இதற்கு இடையில்தான் லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது. இதில்தான் இந்தியாவின் வலிமையை ராஜ்நாத் சிங் சீனாவிற்கு விவரித்தார். எல்லை பிரச்சனையில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்னும் நிலைப்பாட்டை லடாக்கில் இந்தியா எடுத்துள்ளது.. இந்தியாவின் அதிரடியான கொள்கையை இனி சீனா எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே கேள்வி!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+