இனி எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை தாக்க மாட்டோம்: இலங்கை உறுதி
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது
டெல்லி: எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரா உறுதியளித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாத ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் எல்லைப் பகுதி அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மீனவர் பிரச்சனை தீர கூட்டு குழு அமைப்பது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த குழுவின் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், மீனவர் பிரச்னை தீர கூட்டு குழு அமைப்பது; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த குழுவின் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு்ள்ளது. மேலும், எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications