அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கக் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 1 ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒடிஷா மாநில கடற்கரை பகுதியான பாலாசோர் அருகே வீலர் தீவில் அக்னி-1 ஏவுகணை இன்று காலை 9.30மணியளவில் சோதிக்கப்பட்டது. வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை தாக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்த சோதனைக்கான இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications