இந்திய மீனவர் சுட்டுக் கொலை: பாக். தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
டெல்லி: குஜராத் கடலில் சர்வதேச எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடலில் சர்வதேச எல்லைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர் குஜராத் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நரன்பாய் சோசா(30) என்பவர் பலியானார். இதையடுத்து பாகிஸ்தான் கடற்படையினர் 30 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர்.
மறுநாள் இந்தியா திரும்பிய மீனவர்கள் சோசாவின் உடலையும் கொண்டு வந்தனர். தாங்கள் இந்திய கடல் பகுதியில் தான் மீன் பிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். இந்திய மீனவர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு அவரிடம் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஆனால் அவரோ யாரும் கொல்லப்படவில்லை என்றும், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்ததால் தான் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications