சக்ஸஸ்.. வானத்தில் பறந்த "டார்கெட்டை" துல்லியமாக தாக்கி.. இந்தியா திடீரென செய்த ஏவுகணை சோதனை.. ஏன்?
புவனேஷ்வர்: தரையில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒன்று இந்திய ராணுவம் மூலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
Recommended Video
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல தங்களின் ராணுவ பலத்தை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது.
வடகொரியா புதிதாக ஏவுகணை சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா சார்பாக புதிய ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா சோதனை
இந்திய ராணுவம் மூலம் பூமியில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதை surface-to-air missile என்று கூறுவார்கள். அதாவது தரையில் இருந்து வானத்தை நோக்கி சென்று தாக்கும் ஏவுகணை ஆகும். ஒடிசாவில் பாலசோர் பகுதியில் இன்று காலை 10.30 மணி அளவில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அல்ல.

வெற்றி
மாறாக மீடியம் ரேஞ்ச் எனப்படும் நடுத்தர தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும். இது ஏவுகணை மிக துல்லியமாக இன்று இலக்கை தாக்கியது. மிக அதிக வேகத்தில் பறந்து சென்ற டார்கெட்டை துல்லியமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை MRSAM என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அர்த்தம் medium range surface-to-air missile என்பது ஆகும்.

சமீபத்தில் மிஸ் ஆனது
இந்தியா சமீபத்தில்தான் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்தது. கடந்த புதன் கிழமையின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த பிரம்மோஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏவுகணை நிலத்தின் ஒரு பரப்பில் இருந்து இன்னொரு பரப்பில் உள்ளதை தாக்கும் surface-to-surface ஏவுகணை ஆகும். அந்த சோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது. முன்பு மீடியம் தூரம் சென்று தாக்க கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா சோதனை செய்த நிலையில் கடந்த புதன் கிழமை நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை சோதனை செய்தது.

சோதனை செய்தது
இந்த மாத தொடக்கத்தில்தான் இந்தியா இன்னொரு நீண்ட தூரம் செல்ல கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.

தவறுதலாக ஏவியது
பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா தனது ஏவுகணைகளை பாதுகாப்பு கருதி சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications