இந்தியாவின் பெஸ்ட் சிஎம் யார் தெரியுமா? இந்தியா டுடே சுவாரசிய சர்வே
டெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வராக நிதிஷ் குமாரையும், அரவிந்த் கேஜ்ரிவாலையும் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக இந்தியா டுடே சர்வே கூறுகிறது.
'மூட் ஆப் தி நேஷன்' என்ற பெயரில், இந்தியா டுடே-கார்வே இன்சைட்ஸ் சார்பில், ஜூலை 15-27க்கு இடைப்பட்ட காலத்தில், 19 மாநிலங்களில், 97 லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பிரமாண்ட சர்வே முடிவில் இந்த சுவாரசிய முடிவுகள் வெளியாகியுள்ளன.

*மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் 7 சதவீத ஆதரவுடன் 3வது இடத்தில் உள்ளார்
*மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 10 சதவீத ஆதரவுடன் 2வது இடத்தில் உள்ளார்
*டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலா 14 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளனர்
*சொந்த மாநிலத்திலுள்ள மக்களின் கருத்து அடிப்படையில் மட்டும் பார்த்தால், டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு குறைந்துள்ளது. ஆனால் பீகாரில் நிதீஷ்குமாருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
*சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங், நிதீஷ்குமார் ஆகியோருக்குத்தான், அவர்களின் சொந்த மாநிலத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் இவர்களுக்கு பின்னால் இருப்பதால் அதை கருத்து கணிப்பில் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications
