மிசோரமில் காங்.க்கு பின்னடைவு- தொங்கு சட்ட சபைதானாம்: எக்ஸிட் போல்
டெல்லி: மிசோரம் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) தெரிவிக்கின்றன.
டெல்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன.

விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கிறது. காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான டெல்லியில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை அக்கட்சி தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வசம் உள்ள மற்றொரு மாநிலமான மிசோரமிலும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பிருப்பதாகவே எக்ஸிட் போல்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி- சிவோட்டர் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் விவரம்:
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 19 இடங்கள் மட்டும்தான் கிடைக்குமாம். மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்களைக் கைப்பற்றும் என்பதால் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 32 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்ததால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications