அஸ்ஸாமிலும் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.; பாஜகவுக்கு ஏறுமுகம்: இந்தியா டிவி சர்வே
டெல்லி: அசாமில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது. 126 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி 57 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது கருத்துக்கணிப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
அந்த கருத்து கணிப்பில் அசாமில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி 57 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது கருத்துக்கணிப்பு.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 78 சீட்டுகளை வென்றிருந்தது. பத்ருதின் அஜ்மலின் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும், பிறர்-6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அசாம் கணபரிஷத், பாரதிய ஜனதாக கூட்டணி ஏற்படுவதற்கு முன் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக சி வோட்டர் கூறியுள்ளது. எனவே தற்போது அசாமில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications