அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்- ஒபாமா தடாலடி பேட்டி!
டெல்லி: இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லிவரும் ஒபாமா, முன்னதாக இந்தியாவின் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஒபாமா கூறியுள்ளது:

ஜனநாயக நாடுகள்
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான நட்பு இயல்பாய் அமைந்தது. யாரும் முயற்சி எடுத்து இந்த நட்பை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில், இரு நாடுகளுமே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.

நூற்றாண்டின் சிறந்த நட்பு
21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நட்பு நாடுகள் என்றால் அது அமெரிக்காவும், இந்தியாவுமாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது முறை விசிட்
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால், இவ்விரு நாடுகளும், உலகமும் மேலும் பாதுகாப்பானதாகவும், வளர்ச்சிமிக்கதாகவும் மாறும். எனவேதான் எனது அதிபர் பதவி காலத்தில் தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறேன்.

நாடாளுமன்றத்தில் பேசினேன்
ஏற்கனவே 2010ல் இந்தியா வந்து நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தியபோது, உலக சவால்களை சந்திக்க, இந்தியாவும், அமெரிக்காவும் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்பதை விளக்கியிருந்தேன். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications