கடுமையான விசா கெடுபிடிகள்...: அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை
டெல்லி: இந்திய நிறுவனங்களுக்கான விசா விதிமுறைகளை கெடுபிடியாக்கினால் அதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பணியில் சேர வரும் திறன் தொழிலாளர்ளுக்கான எச்ஒன் பி விசாக்களைப் பெற விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது அமெரிக்கா. இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவைக் குறி வைத்தே இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. அதாவது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை குறைந்த சம்பளத்திற்கு, தங்களது நாட்டிலிருந்தே கொண்டு வந்து விடுவதாகவும், உள்ளூர் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில்லை என்றும் பல அமெரிக்க நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இதன் விளைவாகவே தற்போது இந்த எச்ஒன் பி விசா விதிமுறைகளில் கை வைத்துள்ளது அமெரிக்கா.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறுகையில்:-
திறன் தொழிலாளர்களுக்கான சில தற்காலிக விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரி்க்கா முயல்வது, அங்கு வேலைவாய்ப்புகள் மங்கத் தொடங்கி விட்டன என்றுதான் இந்தியா எடுத்துக் கொள்ளும்.
இது நிச்சயம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், அமெரிக்க பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். இரு நாட்டு உறவுகளையும் இது பாதிக்கும் என்றும் நான் சொல்ல விரும்புகிறேன்.
நாளை அமெரிக்க நிறுவனங்கள் இங்கே வரும்போது, நானும் இதேபோல சொல்ல வேண்டி வரலாம். அவர்களது பிரச்சினையை இங்குள்ளவர்கள் காது கொடுத்துக் கேட்க முடியாத நிலை ஏற்படலாம். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்..
மேலும் தேவ்யானி விவகாரத்துக்குப் பின்னர் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது மறைமுகமாக இந்தியாவைப் பழிவாங்கவோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது" என இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications