ராகுல் பிரதமர் ஆகும் துரதிர்ஷ்டம் இந்தியாவுக்கு ஏற்படாது: ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆகும் துரதிர்ஷ்டம் இந்தியாவுக்கு ஏற்படாது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராகுல் காந்தி பிரதமர் ஆகும் துரதிஷ்ட்ம் இந்தியாவுக்கு ஏற்படாது. ராகுல் பிரதமர் ஆனால் நாட்டின் நிலைமை மோசமாகும். குடும்ப பெயரை வைத்துக் கொண்டு இதுவரை வந்தவர்கள் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்.

இது இளவரசருக்கும், சாதாரண ஆளுக்கும் இடையேயான போர். என் போராட்டம் ராகுல் காந்தியை எதிர்த்து அல்ல. பரம்பரை அரசியலை எதிர்த்து தான் என்றார்.
குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அவரது தொகுதியான அமேதியில் போட்டியிடவிருக்கிறார். ராகுல் பிரதமர் பொறுப்பை ஏற்கத் தயார் என்று கூறியதற்கு தான் விஷ்வாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications