ராஜஸ்தானில் விமானப்படை விமான விபத்து.. விமானப்படை வீரர் வீரமரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் இந்திய விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி அருகே உள்ள குன்னூரில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் இந்த விபத்து ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே உள்ள விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானத்தில் விங் கமாண்டர் ஹர்சித் சின்ஹா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
மாலை நேரத்தில் சாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலைவன தேசிய பூங்கா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பின் கமாண்டர் ஹர்ஷிகா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,இன்று மாலை விமான விபத்தில் பின் கமாண்டர் சிதைவடைந்த சோகமான தகவலை இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் துணிச்சலான அவரது மறைவை அடுத்து அவரை இழந்து வாடும் குடும்பத்துடன் இந்திய விமானப்படை உறுதியாக நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications