கொரோனா தடுப்பூசி.. ஒரு லட்சம் டோஸ்களை.. நேபாள ராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய இந்தியா
காத்மாண்டு: இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனா வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அண்டை நாடு என்ற முறையில் நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல சீனாவும் தனது தடுப்பூசியின் எட்டு லட்சம் டோஸ்களை நேபாளத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் கடந்த மாதம் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அங்கு தற்போது வரை 2.76 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 3,207 பேர் சிகிச்சை பலனிற்றி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்,
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications