இந்த ஸ்பெஷல் 'அம்மா'வுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்த இந்திய ராணுவத்தின் ருத்ரதாண்டவம்
டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்கியது கார்கில் போரில் வீரமரணம் அடைந்த 22 வயது கேப்டன் விஜயந்த் தாப்பாரின் தாயின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற கர்னல் விஜேந்திர தாப்பார் தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் விஜேந்திர தாப்பார் கூறுகையில்,
எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள். இன்று என் மனைவியின் பிறந்தநாள். அவருக்கு இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷனை விட சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைக்காது.
இந்திய ராணுவத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பாகிஸ்தான் அதற்கான விலையை அளிக்க வேண்டி இருக்கும் என்றார்.
விஜேந்திர தாப்பாரின் மகன் கேப்டன் விஜயந்த் தாப்பார்(22) கார்கில் போரின் போது ராஜ்புடானா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டை தலைமை தாங்கிச் சென்று 1999ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications