For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ வீரர்களின் உடலை சிதைத்தது காட்டு மிராண்டித்தனமானது.. பாக்.கிற்கு அருண் ஜேட்லி கடும் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக சிதைத்த பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் பூன்ஞ் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Indian Army will react appropriately to mutilation of 2 jawans, says Arun jaitley

அவர்களது உடல்களை அந்த நாட்டு வீரர்கள் வெட்டி சிதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்திய வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பாக்கிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்தது காட்டு மிராண்டித்தனமான செயலின் தீவிர வடிவமாகும். நமது இந்திய படைகள் மீது நம்பிக்கை உள்ளது தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

English summary
Pakistan army’s border action teams crossed into the Indian side along the LoC in Poonch district, killing 2 Army jawans and mutilating their bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X