சென்னையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடும் நேரம்.. காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாக். துப்பாக்கி சூடு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் இந்திய ராணுவம் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்து இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் அர்னியா பகுதியில் நள்ளிரவு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அப்போது திடீரென பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் இந்திய துருப்புகளின் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் வலுவான பதிலடியை கொடுத்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Indian BSF soldier has been injured in firing by Pakistani troops on Indian Army in Kashmir

\இதுகுறித்து 3,323 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் எல்லை பாதுகாப்பு படை அளித்து இருக்கும் விளக்கத்தில், "பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மோர்டார் செல்லிங் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடியை கொடுத்து உள்ளனர். அதிகாலை 3 மணி வரை துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்ந்தது. பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரு நாட்டு படையினர் இடையே ஏற்பட்ட இந்த தாக்குதல் சம்பவ, காரணமாக ஜம்மு காஷ்மீரின் அர்னியா, ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து ஆர்.எஸ்.புரா அர்னியாவில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்து இருக்கும் புல்லெஹ் சக் கிராம பஞ்சாயத்து தலைவர் தேவ் ராஜ் சவுத்ரி தெரிவிக்கையில், "இரவில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டன. எந்த நபருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், வீடுகள் சேதமடைந்து உள்ளன.

பாகிஸ்தான் தரப்பு இதுபோன்ற தாக்குதலை நடத்தி 6 ஆண்டுகள் ஆகின்றன. நமது பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி தாக்குதலை கொடுத்து உல்ளார்கள்." என்றார். இந்த தாக்குதல் சம்பவத்தை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் பார்த்து உள்ளனர். இதுபற்றி அப்பகுதி வாசி தெரிவிக்கையில், "நாங்கள் 3 மோர்டர் செல்களை கண்டோம். இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Indian BSF soldier has been injured in firing by Pakistani troops on Indian Army in Kashmir

அர்னியா பகுதியை சேர்ந்த எக்தா என்ற பெண் தெரிவிக்கையில், "தாக்குதல் சம்பவங்களின்போது அதிர்ச்சியடைந்து வீட்டுக்கு உள்ளேயே முடங்கிவிட்டோம். இரவு 8 மணி அளவில் மிகப்பெரிய மோர்டர் செக் எங்கள் வீட்டை சேதமாக்கியது. என் வீட்டு சமையலரை சேதம் அடைந்து உள்ளது. எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து உள்ளது. இறைவன் அருளால் நாங்கள் தப்பித்தோம்." என்றார்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+