இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து சோதனையிட்ட அமெரிக்க அதிகாரிகள்
டெல்லி: விசா மோசடிப்புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை.
தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா வந்துள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்புஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.
தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர்.
1999ம் ஆண்டு ஐஎப்எஸ்அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்புசிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications